Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
மலையக மக்கள் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், இவர்களில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்வர் என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களை ஏமாற்றாமல் இருந்தமையாலேயே, இரண்டு முறை தன்னைத் தெரிவு செய்த மக்கள், நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர் என்றும் தன்னுடைய ஒவ்வொரு நாடாளுமன்றப் பிரவேசத்தின்போதும், மக்களுக்குத் தேவையான பல சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். எனவே, மக்களுக்கு உண்மையானச் சேவையைச் செய்துள்ளவர்கள் யார், இனிமேல் செய்யக் கூடியவர்கள் யார் என்பதை ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026