2025 மே 19, திங்கட்கிழமை

தற்காலிக பாலத்தால் 150 குடும்பங்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். குமார்

பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட வெல்லவல தொண்டமான்புர ஏ மற்றும் சி பிரிவுகளில் வசிக்கும் சுமார் 450 பேர் நிரந்தர பாலமொன்று இன்மையால் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அப்பகுதியிலிருந்து தொழிலுக்கும் பாடசாலைகளுக்கும் செல்வோர் வெவள் தோல ஆற்றை தந்காலிக பாலமொன்றின் ஊடாக கடந்தே தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.


எனினும் அதிக மழைப் பெய்யும் காலங்களில்  பாலம் நீரில் அடித்துச் சென்று விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தடவையும் பாலம் நீரில் அடித்துச் செல்லும் போது, பலகைகளைக் கொண்டு பாலமொன்றை நிர்மாணித்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாலம் இல்லாவிட்டால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து, வெல்லவல பகுதிக்கு வர வேண்டுமென்று தெரிவிக்கின்றனர்.

இந்த பாலம் தொடர்பில்  உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் இதுவரையிலும் அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்தார்கள்.


எனவே 450 பேர் பயன்படுத்தும் தற்காலிக பாலத்துக்கு பதிலாக தரமான புதிய பாலமொன்றை நிர்மாணித்து தர அதிகாரிகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.



.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X