2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தலவாக்கலையில் கைதான 9 மாணவர்களும் சரீர பிணையில் விடுதலை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

தலவாக்கலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கணினி உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் கைதான ஒன்பது மாணவர்களையும் தலா 75,000 ரூபாய், சரீர பிணையில் செல்ல நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.டி.சீ.எஸ். ஏவாவசம் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் கடந்த 17ஆம் திகதி காணாமல் போனாதாக கூறப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி உபகரணங்கள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மேற்படி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இவர்களை பொலிஸார் கைதுசெய்ததுடன்  ; இவர்களது வீடுகளிலிருந்து கணினி உபகரணங்களையும் மீட்டனர்.  மீட்டுள்ளனர்.

இதனையடுத், இம்மாணவர்களை நேற்று  வியாழக்கிழமை, நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .