2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

தலவாக்கலை- ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில்  2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல்  காரணமாக 24 வீடுகளைக் கொண்ட  குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது.

 இதனால் 24 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தோட்டத்தில் உள்ள பொது கலாசார மண்டபத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ந்தும்  மூன்று வருடங்களாக அக்கலாசார மண்டபத்தில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

 இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது,  2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீடமைப்பு பணிகள்  துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் முழுமைப்படுத்தப்படாத குறித்த வீடுகளில், சேலைகள், பெட்சீட்டுகளால் மறைத்து, பலர் வாழத் தொடங்கியுள்ளனர்.

 

எனவே,  உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி  தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X