R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராய்ச்சி
தெரணியகல பிரதேச சபையின் தவிசாளரான லக்ஸ்மன் ராஜகருணாவை மே மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அவிசாவளை நீதவான் ஜனக சமரசிங்க இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்குச் சொந்தமான சில பொருள்கள், தவிசாளரிடமிருந்து தெரணியகல பொலிஸாரால் அண்மையில் கைப்பற்றப்பட்டு, பொது சொத்துகள் சட்டத்தின் கீழ், தவிசாளரும் 16ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன், 17ஆம் திகதி அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட தவிசாளரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இன்று மீண்டும் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே, தவிசாளரை மே மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago