2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

’தேசிய கட்டட ஆராச்சி நிலையத்துக்கு வாகனங்கள்’

ஆ.ரமேஸ்   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தின், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தில் நிலவிவரும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த நிலையத்துக்குத் தேவையான வாகனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இது தொடர்பாக அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட​வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளால் பல கோரிக்கைக​ள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் நகரசபைகள், மாநகரசபைகள், பிரதேச சபைகள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள், அரசாங்க திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் சபைத் தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல், ஹட்டன் நக​ரசபைக்குட்பட்ட ஹட்டன் நகரத்தின் நவீன அபிவிருத்தி தொடர்பாகவும் இந்நகரில் குப்பை அகற்றல் தொடர்பில் கவனம் செலுத்துதல் தொடர்பாகவும் உரையாற்றினார்.

அத்துடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .