2025 மே 19, திங்கட்கிழமை

தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. அத்தோடு, லக்ஷபான மற்றும் பிரவுன்ஸ்வீக் தோட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X