2025 மே 19, திங்கட்கிழமை

தோட்டப்புற குழந்தைகளின் போஷாக்கின்மை அதிகரிப்பு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுதத்.எச்.எம்.ஹேவா

தோட்டத் தொழிலாளர்களுக்கு உரியமுறையில் இன்மையுடன் தோட்டப்புற குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்துள்ளதாக ப்ரொடக்ட் அமைப்பின் உப தலைவர் கே. மைதிலி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் நாளாந்த சம்பளம் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.

இன்று இந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு, இத்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உணவளிக்கவோ அல்லது பாடசாலைக்கு ஒழுங்காக அனுப்பவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இவ்வாறான நிலைமைகள் காரணமாக தோட்டத்திலுள்ள பிள்ளைகள் போசாக்கின்மைக்கு ஆளாகும் அபாயம் அதிகளவில் காணப்படுவதுடன் தோட்டத்திலுள்ள பிள்ளைகள் முறையான கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் அபாயமும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏதாவது சலுகை வேலைத்திட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதுடன் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்கள் இது தொடர்பில் மௌன கொள்கையை கடைப்பிடிப்பது வருத்தமளிக்கின்றது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X