Kogilavani / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ், மு.இராமச்சந்திரன்
தலவாக்கலை நகரில் காணப்படும் கடைத்தொகுதிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்புரியும் நாட்டாமைகள், தமது நாட் கூலியை அதிகரிக்கக் கோரியும் மேலும் சில கோரிக்ககைளை முன்வைத்தும், தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தில் இன்று(6) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 தொழிலாளர்கள், பொதி மூட்டைகளுக்கான கூலியை 10 ரூபாயாக அதிகரிக்குமாறு இதன்போது வலியுறித்தினர்.
இதேவேளை, தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், சுமார் 40 வருடங்களுக்கு மேல் தாம் வசித்து வருவதாகவும் தமது நலனில் நகரசபை அக்கறைகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது கோரினர்.
மேலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நாட்டாமை சங்கத்தை நகரசபையின் கீழ், பதிவு செய்யவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் வலியுறுத்தினர்.



4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago