Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொரகஸ், ஹிப்ராபுர பகுதி மக்களுக்கு பொதுவான நீர்தாங்கியை அமைத்துக் கொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, வெலிமடை பிரதேச செயலாளர் காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை(2) நடைபெற்றது.
மேற்படி பிரதேசத்தில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் கடந்த 15 வருடங்களாக குடிநீர் வசதியின்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக, தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு உத்தேச மதிப்பீடு ஒன்றும் தயாரித்துக் கொடுக்கப்பட்டதுடன் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனாலும், பொதுவான குடிநீர் தாங்கியை அமைப்பதற்கான காணியை பெற்றுக்கொள்வதில் உள்ள இடர்பாடு காரணமாக, கடந்த 5 மாதங்களாக இத்திட்டம் இழுபறி நிலையில் உள்ளது.
இந்நிலையிலே இக்கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை(2) ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலில், வெலிமடை பிரதேச செயலாளர், தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள், தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago