Kogilavani / 2016 மார்ச் 25 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.எம்.ரம்ஸீன்
இலங்கையில் உற்பத்தி செய்யடும் பொருட்களிலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவைக் காட்டும் சுட்டியை பொருட்களின் பொதியிடலில் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு கண்டி பல்லேகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று(23) நடைபெற்ற மாவட்ட மட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'சர்வதேச நீர்தினத்;தையொட்டி, வருடாந்தம் கருப்பொருளை முன்வைத்து மாநாடுகளை நடத்தி விருதுகளை வழங்குவதில் பயனில்லை. நாட்டுமக்;கள் நீர் வளத்தின் அவசியத்தையும் அதனை சிக்கனத்துடனும்; பாவிக்கும் மனப்பாங்கையும் உள்வாங்கிக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக அமைச்சரவையில் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொருட்களின் உற்பத்திக்கு பாவித்த நீரின் அளவை மட்டுமன்றி பொருள் உற்பத்தியினால் மாசடைந்த நீர் மீணடும் சுத்திகரிக்கப்பட்ட அளவையும் நுகர்வோர் அறிந்துகொள்ள முடியும்.
இந்தச் சுட்டி பயன்படுத்துவது ஆரம்பத்தில் சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்படமாட்டாது. ஆனால், எதிர்காலத்தில் சட்டரீதியில் கட்டாயப்படுத்தப்படும்.
உலகில் சுத்தமற்ற நீரை உபயோகிப்பதால் மட்டுமன்றி குடிநீர் தட்டுப்பாடு காரணமாகவும் மனிதர்கள் மரணத்தைத் தழுவுகின்றனர். எனவே கிடைக்கக்கூடிய நீரின் தரத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்டி மாவட்டத்தில் இரண்டு பாரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவை கண்டி தெற்கு மற்றும் குண்டசாலை - ஹாரகம குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆகும். இதற்கு 50ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவு மதிப்படப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பல்;லேகலை பகுதி துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. மாகாண சபை, சிறைச்சாலை மட்டுமன்றி அரச நிறுவனங்கள் பல்லேகலையில் இயங்கி வருகின்றன. அத்துடன் சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்படவுள்ளது. எனவே பல்லேகலை பகுதி மக்களின் குடிநீர் தேவையை விரைவில் நிறைவு செய்யவேண்டும்.
மாவட்ட குடிநீர் விநியோகத் திட்டடங்களை முன்னெடுக்க விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லும் போது சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் நாட்டில் கிளிநொச்சி உட்பட ஏழு மாவட்டங்களில் பாரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட அமைச்சின் பணிப்பாளர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago