Kogilavani / 2016 ஜூன் 21 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஷெல்டன் ஹெட்டியாரச்சி
நுண்ணங்கிகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction ) இயந்திரமொன்றை, 14 மில்லியன் ரூபாய்க்குக் கொள்வனவு செய்து, நுவரெலியா வைத்தியசாலையிடம் கையளிக்க இலங்கை ரொட்டரிக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை ரொட்டரிக் கழத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அவுஸ்திரேலியா ரொட்டரிக் கழகத்தின் நிதியொதுக்கீட்டினூடாக இந்த இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இவ்வியந்திரம், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்காலிமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்தவுடன், அந்த இயந்திரத்தை வைத்தியசாலைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் பேர்;சி டயஸ் தெரிவித்துள்ளார்.
இந்த இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பில் நுவரெலியா, பேராதனை மற்றும் யாழ்ப்பாண ஆய்வுகூடங்களைச் சேர்ந்த 7 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் இவர்களில் தெரிவு செய்யப்படும் இருவர், மேலதிக பயிற்சிக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் பணிப்பாளர் கூறினார்.
இவ்வாறான இயந்திரமொன்று, யாழ்.வைத்தியசாலைக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago