Kogilavani / 2017 மே 05 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
ஆசிரியர் உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவை, நிலுவை தொகையுடன் வழங்குவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவுடன் மேலதிகக் கொடுப்பனவாக 4,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு, கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இக்கொடுப்பனவு பெப்ரவரி மாத்ததிலிருந்து வழங்கப்படவுள்ளது.
இதற்கான சுற்றுநிருபங்களை, கல்வி அமைச்சு மாகாண பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
“ஆசிரியர் உதவியாளர்களுக்கு மேலதிகமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 4,000 ரூபாய் கொடுப்பனவில், பல்வேறு இழுபறிநிலை ஏற்பட்டபோதிலும், என்னுடைய தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக, அண்மையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, அதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டார்.
அதனடிப்படையில், நேற்று (04) கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி கையொப்பமிட்ட சுற்றறிக்கை அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாத நிலுவையுடன் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது” என்றார்.
3 hours ago
9 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
11 Apr 2026