2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

நாள் சம்பளத்தில் குளறுபடி: சம்பளத்தை திருப்பிக்கொடுத்த தொழிலாளர்கள்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மதுரட்ட தனியார்துறைக்குச் சொந்தமான இராகலை - கொனிக்கா மேல் பிரிவு, கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள், நாள் சம்பளத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, சம்பளத்தை திருப்பிக்கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. '18 கிலோகிராம் கொழுந்து பறித்தால் மாத்திரமே தமக்கு முழுநேர சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்த தொழிலாளர்கள், அதற்கு குறைவாக பறிக்கப்படும் கொழுந்துக்கு அரை நாளுக்கான சம்பளத்தையே தோட்ட நிர்வாகம் வழங்;குவதாகவும் குறிப்பிட்டனர்.

'தற்பொழுது கொழுந்து குறைவான காலம் என்பதால் 18 கிலோ கிராம் கொழுந்து பறிக்க முடியாத  நிலையே ஏற்பட்டுள்ளது' என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று,  தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்;வாகத்துக்குமிடையில், நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்றப் போதிலும், அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

எனவே, இது தொடர்பான கலந்துரையாடலொன்று, நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட பொது முகாமையாளர் சுபாஸ் அபேவிக்கிரமவை தொடர்பு கொண்டு கேட்டபோது,

'18 கிலோவுக்கு  குறைவாக கொழுந்து பறிப்பவர்களுக்கு முழு நேர சம்பளம் வழங்க முடியாது. இவர்கள் நிறை குறைய கொழுந்து பறித்தமை காரணமாகவே, அரை நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.அவ்வாறு செய்யாவிட்டால் தோட்டங்கள் நட்டதை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .