Kogilavani / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
'நுவரெலியா மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது' என மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறினார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக் கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சரிய மண்டபத்தில், திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
குழுவின் இணைத்தலைவர்களான மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'ஏழைத் தொழிலாளர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் இடமில்லை. மாத்தளை, கண்டி போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, நுவரெலியா மாவட்டத்திலுள்ள காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவர், இறம்பொடை பகுதியில் பாரிய இடமொன்றை கைப்பற்றியுள்ளார். டன்பார் தோட்டத்திலுள்ள பல ஏக்கர் நிலம், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் காணி தேவையானவர்களுக்கு காணி கச்சேரி வைத்து, காணிகள் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் கவனம் செலுத்த வேண்டும்
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் காணிமறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள், முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் உரியவர்கள் ஆராய வேண்டும்' என கோரினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago