Sudharshini / 2016 மே 31 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜ்
மண்சரிவு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள, நுவரெலியா கல்வி வலயம், ஹோல்புறூக் கோட்டம் 3இற்கு உட்பட்ட ஹோம்மூட் தமிழ் வித்தியாலயத்துக்கு, புதிய கட்டடத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய மாகாண விவசாய, நீர்ப்பாசன, கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
இப்பகுதியில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக பாடசாலை கட்டடங்களின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சத்தின் மத்தியில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.
ஆரம்பப் பாடசாலையான இப்பாடசாலையில், 100இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண அமைச்சர் ம.ரமேஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
'இப்பாடசாலை விவகாரம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை பாடசாலைக்கு அனுப்பியுள்ளேன். அக்குழுவின் அறிக்கை கிடைத்தப்பின்பு பாடசாலைக்கு கட்டடமொன்றை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago