Sudharshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசசந்திரன்
ஹட்டனில் இருந்து ஒஸ்போன் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் நடத்துநரை, டிக்கோயா பகுதியில் வைத்து மூவர் தாக்கி விட்டு அவரிடமிருந்த அலைபேசி மற்றும் 20,000 ரூhய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நடத்துநர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நடத்துனரை தாக்கிய மூன்று சந்தேக நபர்களும் மதுபோதையில் இருந்ததாகவும் டிக்கோயா பகுதியில் பஸ்ஸை நிறுத்தி வைக்குமாறு நடத்துநரை அச்சுறுத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சவுத் வனராஜா பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026