2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நடைபாதை வியாபாரிகள் வெளியேற்றம்

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் நகரில், முதல் கொரோனா தொற்றாளராக அடையாளங்காணப்பட்ட நபரது வர்த்தக நிலையத்துக்கு அருகில், நடைபாதை வியாபாரத்தை மேற்கொண்ட சில வியாபாரிகள், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி, ஹட்டன் நகரில் இன்று (2) வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது, ஹட்டன்-டிக்கோயா நகரசபை பொதுசுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேற்படி வர்த்தகர்கள் தனிமைப்படுத்தலில் இருக்காது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமையவே, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பொதுசுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பேணுமாறு, மேற்படி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .