Kogilavani / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளையில் 'சந்திரசேகரன் நலன்புரி நிலையம்' என்ற சமூக மேம்பாட்டு அமைப்பு, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் போஷகராகவும் வழிநடத்துநராகவும் பதுளை மாவட்ட எம்.பியான அ. அரவிந்தகுமார் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வமைப்பின் தலைவராக, எம்.பி.சிவசுப்பிரமணியமும் செயலாளராக கே.சிவநேசன், பொருளாளராக திருமதி சசிகுமார் சர்மிளாதேவி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
உப-தலைவர்களாக எஸ். தியாகராஜா, எஸ். இராஜேந்திரன்,கே. இராமச்சந்திரன் ஆகியோரும் உப-செயலாளர்களாக வி.சுப்பிரமணியம், ஆர்.நிசாந்தன், பி. பார்த்தீபன், எஸ். பதஞ்சலியன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கணக்காய்வாளர் குழு உறுப்பினர்களாக டி.இராஜேந்திரன், டி.மகேந்திரன், எஸ்.ஆனந்தகுமாரும் செயற்குழு உறுப்பினர்களாக டி.நவரட்ணராஜா, எஸ்.தர்மலிங்கம், எம்.கணேசமூர்த்தி, எஸ்.நமசிவாயம், எஸ்.ஆனந்தராஜா, வி.விஸ்வநாதன், திருமதி. கே.சாரதாம்பாள், திருமதி ஜி.பிரசில்டா, எஸ்.புவனேஸ்வரி, திருமதி துஷாந்தி ரசாங்கிகா, திருமதி.லாளினி சந்திரபோஸ், வி.சிவராஜா, எஸ்.ஸ்ரீதரன், எஸ்.சந்திரசேகர், எஸ்.விஜயராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளது, கல்வித்துறையின் அபிவிருத்தி, உயர்கல்விக்கு உதவி, சுயதொழில் வசதி, சமூகமேம்பாடு மற்றும் புற்றுநோய், சிறுநீரகநோய், இதய நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வைத்திய உதவி மற்றும் நிதியத்தின் உறுப்பினர்கள் நலன்புரிதிட்டம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய வகையில், இந்நிலையம் செயற்படவுள்ளதாக, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago