2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

‘நல்லாட்சி போன்ற அதிருப்தியான ஆட்சி இருந்ததில்லை’

மொஹொமட் ஆஸிக்   / 2020 மே 28 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நல்லாட்சி அரசாங்கம் பேன்று, பொதுமக்கள் அதிருப்திக்குள்ளான ஆட்சியொன்று, சுதந்திரத்தின் பின்னர் இதுவரை உருவாகவில்லை என்றும் எனவே எப்போது தேர்தலை நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் கெஹெலியா றம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில், கடந்த ஆட்சி பற்றிய அதிருப்தி மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது என்று தெரிவித்த அவர், தற்போதைய எதிர்க்கட்சியே வரலாற்றில் மிகவும் நயவஞ்சகம் கொண்ட ஒரு எதிர்க்கட்சியாகத் திகழ்கின்றது என்றும் தெரிவித்தார்.

தற்போது காணப்படும் நெருக்கடிச் சூழ்நிலையிலும் சிறப்பாக செயற்பாடும் ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது நாட்டிலேயே உள்ளனர் என்பதை மற்றையவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .