2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நானுஓயா ரயில் நிலையத்தின் பொறியியல் பிரிவு அலுவலகத்துக்கு பூட்டு

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறியியல் பிரிவு அலுவலகம், இன்று (04) முதல், மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள பொறியியல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவரின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே, குறித்த அதிகாரி பணியாற்றிய இடத்தில் இருந்த  ஏனைய அதிகாரிகள், ஊழியர்கள்  உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 43 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X