Editorial / 2020 மே 26 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அனுர குமார
மாத்தளை, நாவுல பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில், நாளுக்கு நாள், காட்டு யானைகளின் தொல்லையும் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மொரகாகந்த நீர்த்தேக்கத்துக்கு சுற்றியுள்ள பயிர்நிலங்கள், யானைகளால் ஏற்கனவே பல முறை நாசப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று, கொங்கஹவெல பகுதியில், தேங்காய் உள்ளிட்ட பயிர்களை, யானைகள் நாசம் செய்ததாகவும் இதனால் தாங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்னை மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள், மரக்கறி பயிர்கள் அனைத்தும் யானைகளால் நாசமாக்கப்பட்டு வருவதாகவும் யானைகள் வராமல் இருப்பதற்காக கட்டப்பட்ட அணைகளையும் உடைத்துக்கொண்டு, பயிர்நிலங்களுக்குள் யானைகள் நுழைவதாகவும் குற்றச்சாடட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் எல்லையில், யானைகளுக்கான பாதுகப்பு வேலிகள் இல்லை என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே, இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago