Gavitha / 2021 மார்ச் 01 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நீண்ட காலமாக, குண்டும் குழியுமாக காணப்படும் நாவலப்பிட்டி பத்தனை வழியான தலவாக்கலை வீதியைப் புனரமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சுமார் 30 கிலோமீற்றர் தூரம் வரையிலான பாதை, மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுவதால், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், கர்ப்பிணிகள், பொதுப்போக்குவரத்து சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
நாள் தோறும் திம்புள்ள-பத்தனை, கெலிவத்தை, போகாவத்தை குயின்ஸ்பெரி, கெட்டபுலா, கடியனெல்ல, போஹில், கிரீன்வூட், கல்லோயா பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கும் குறித்த வீதியை செப்பனிட, அமைச்சர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025