2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

’நுவரெலியா மாநகர சபை நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும்’

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நுவரெலியா மாநகர சபையின்  நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்தினுள் அறிக்கை ஒன்றை  சமர்ப்பிக்குமாறு, மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பீ.எச்.என்.ஜயவிக்ரமவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமக்கு, நுவரெலியா மாநகர சபையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை பூரணமாக விசாரணை செய்யுமாறும், ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

மத்திய மாகாண ஆளுநர் காரியாலத்தில், அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, ஆளுநர் நிலூக்கா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நிதி விவகாரங்கள் தொடர்பாக சரியான முறையில் வரி அறவீடுகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு நுவரெலியாவின் வனப்புமிகு காட்சிகளைக் கண்டுகளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அவர் கூறினார்.

நுவரெலியா கிறகரி குளம் மற்றும் விக்டோரியா பூங்கா போன்ற பகுதிகளை சுத்தமாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும்படியும் நுவரெலியா மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .