Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரான அனுஷா சந்திரசேகரன் மற்றும் ஷான் பிரதீஷ் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான அனுஷா சந்திரசேகரன் மற்றும் கட்சியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் மகன் ஷான் பிரதீஷ் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் இவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. R
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago