Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நுவரெலியா கந்தேஎல நீர்த்தேக்கத்தில் சுற்றுலா பயணிகளை படகு மூலம் அழைத்துச் செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
நுவரெலியாவிற்கு வரும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் குறித்த நீர்த்தேக்கத்தில் படகு மூலம் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நீர்த்தேக்கமானது, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், இங்கு வசிக்கும் சிலர் பிளாஸ்டிக் பீப்பாய்களைப் பயன்படுத்தி தயாரித்த பல படகுகளில், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு படகில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 20 சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அந்த படகுகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு ஜாக்கெட் வழங்கப்படுவதில்லை.
இது தொடர்பில் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோனிடம் வினவியபோது, படகில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, பாதுகாப்பு அங்கியை வழங்குமாறு படகுச் சேவையை நடத்துபவர்கள், பல தடவைகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர் என்றார்.
அத்துடன் இங்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுச் சேவையை முறையாகப் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நுவரெலியா பிராந்திய செயலாளருக்கு மாவட்டச் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025