2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்கலை, அக்கரப்பத்தனை, பூண்டுலோயா ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர், நேற்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை - லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம் கிளைட்ஸ்டேல் பிரிவு, பூண்டுலோயா சீன் தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே, இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனங்காணப்பட்ட இம்மூவரும், சுகாதார பாதுகாப்புடன், ஹம்பந்தோட்டையிலுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவேளை, இவர்களுடன் நெருக்கிய தொடர்பைப் பேணிய அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை லிப்பகல தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர், தலவாக்கலை சென்கிளயார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவராவார். 

கடந்த 16ஆம் திகதி கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து வந்து, தோட்டத்திலுள்ள தனது வீட்டில் இரகசியமாகத் தங்கியிருந்த இவர் குறித்த தகவல், பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, இவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர், இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பெல்மோர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், கொழும்பு 12 பகுதியில் இருந்து வந்துள்ளார் என்றும் அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொழும்பில் நாள் சம்பளத்துக்காப் பணியாற்றிய இளைஞன், பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு, கடந்த 16 ஆம் திகதி வந்துள்ளார் என்றும் இவரின் வைரஸ் தொற்று பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த 50க்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .