2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சேவையாளர்களது பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில்  முதலாம் தரத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிறி முனசிங்க தலைமையில் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று (19) நடைபெற்றது.

பொலிஸ் மா அதிபர் இளங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சேவையாளர்களின் பிள்ளைகளுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் பைகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஹட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உயர் பொலிஸ் அதிகாரிகள், ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ், வட்டவளை, நோர்வூட், கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .