2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாடசாலை கட்டடம் வேறொரு இடத்துக்கு இடமாற்றம்

Kogilavani   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

பிரதேச மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து வெலிமடை தம்பவின்ன தோட்டத்தின் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்படவிருந்த வெலிமடை, முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கான ஆரம்பப்பிரிவு கட்டடம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு கட்டடம் வைபவம், வெலிமடை தம்பவின்ன தோட்ட கோவிலுக்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் அமைக்கப்படவிருந்தது. இதற்கான அடிக்கல்லும் நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை(4) நாட்டப்படவிருந்தது.

இந்நிலையில், ஆலயத்தில் நடைபெறும் அன்றாட பூஜை வழிபாடுகளால் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு  ஏற்படும் என்பதால், அவ்விடத்தை விட்டு வேறொரு இடத்தில் பாடசாலையை நிர்மாணிக்குமாறு பிரதேச மக்களை கோரியதைத் தொடர்ந்து, பிரதேச மக்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் இடையே இன்று(1) அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர், பொலிஸாரின் தலையீட்டைத் தொடர்ந்து நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்வரப்பட்டது.  இது தொடர்பில் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் பியதாச ரத்னாயக்கவை தொடர்புக் கொண்டு கேட்டபோது,   

'கோயிலுக்கும் பாடசாலைக்கும் இடையூறு இல்லாத வகையில் ஆலயத்திலிருந்து 500 மீற்றருக்கு தொலைவில் பாடசாலை கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்விடயம் பிரதேச மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து  மக்கள் அதனை ஏற்றுகொண்டனர்' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .