Niroshini / 2017 மே 06 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
மலையத்தில் உள்ள பாடசாலைளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வி அமைச்சின் ஊடாக கல்வி இராஜாங்க அமைச்சர் பல்வேறு வேலைத்திட்டங்களை மலையகத்தில் முன்னெடுத்து வருகின்றார்.
அதில் கடந்த வருடம், பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, 23 கணித விஞ்ஞான பாடசாலைகளும் ஒரு விளையாட்டு பாடசாலையும் ஒரு நுண்கலை பாடசாலையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அவை பாரிய அளவில் அபிவிருத்திகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
அதன் ஒரு படி வளர்ச்சியாக 2017 ஆண்டும் 250 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் முதற் கட்டமாக 35 பாடசாலைகள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கடிதங்களை பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, மீபே தேசிய கல்வி நிருவகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டட அபிவிருத்தி பணிப்பளர் கலாநிதி அபேசுந்தர பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி சபாரஜ்சன் உட்பட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,
“இந்த 250 மில்லியன் ரூபாய் நிதியும் தெரிவுசெய்யபட்ட 35 பாடசாலைகயில் உள்ள அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் கட்டபட்டு குறையாக இருக்கும் கட்டடங்களில் முதலாம் மாடி மற்றும் இரண்டாம் மாடிகள் உடனடியாக பூர்த்தி செய்யபடும். அத்துடன், பாடசாலைகளுக்கு தேவையான தளபாடங்கள் உட்பட ஏனைய பொருட்கள் கொள்வவு செய்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
அந்த வகையில், நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலையம்: கலைவாணி த.வி¸ லபுக்கலை 4.5 மில்லியன்¸ குறிஞ்சி த.வி¸ பூண்டுலோயா 3.5 மில்லியன்¸ ஸ்ரீ சண்முகா த.வி¸ அபுகஸ்தலாவ 5.5 மில்லியன்¸ நுவடிரலியா கல்வி வலையம் திம்புல்ல த.ம வி¸ பத்தனை 5.5 மில்லியன்¸ போட்மோர் த.வி¸ அக்கரபத்தனை 06 மில்லியன்¸ சந்திரகம் த.வி¸ டயகம 5.5 மில்லியன்¸ ஒலிபென்ட் த.வி¸ நுவரெலியா 04 மில்லியன்¸ யதன்சைட் த.வி¸ கொட்டகலை 4.5 மில்லியன்¸ எஸ்கடல் த.வி¸ கந்தபொல 06 மில்லியன்¸ வலப்பனை கல்வி வலையம் ஹைவொரஸ்ட் இல – 02 த.வி¸ கந்தபொல 08 மில்லியன்¸ முல்லோயா த.ம.வி¸ ஹங்குராஹ்கத்த கல்வி வலையம் ஹேவாஹெட்ட 07 மில்லியன்¸ கபரகல த.வி¸ எலமுல்ல 6.5 மில்லியன்¸ எலமுல்ல த.வி¸ எலமுல்ல 6.5 மில்லியன்¸ அட்டன் கல்வி வலையம் சென் ஜோசப் ஆரம்ப த.வி¸ மஸ்கெலியா 08 மில்லியன்¸ டின்சின் த.ம.வி¸ பொகவந்தலாவ 08 மில்லியன்¸ கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலையம் கலமுதுன்ன த.வி¸ தொலஸ்பாக 06 மில்லியன்¸ நிவ் பீகொக் த.வி¸ புசல்லாவ 7.5 மில்லியன்¸ ஓல்ட் பீகொக் த.வி¸ புசல்லாவ 7.5 மில்லியன்¸ வத்தேகம கல்வி வலையம் கெங்கால த.வி¸ கெங்கால 5.5 மில்லியன்¸ வாணி த.வி¸ பல்லேகல 2.5 மில்லியன்¸ களுத்துறை மாவட்டம் களுத்துறை கல்வி வலையம் பயகல இந்து த.வி¸ தொடங்கொட 09 மில்லியன்¸ கொடஹென த.வி¸ தொடங்கொட 02 மில்லியன்¸ கொழும்பு மாவட்டம் ஹோமாகம கல்வி வலையம் புவக்பிட்டிய ஆரம்ப பிரிவு த.வி¸ புவக்பிட்டிய 10 மில்லியன் புதுளை மாவட்டம் பண்டாரவல கல்வி வலையம் ஹல்துமுல்ல த.ம.வி¸ ஹல்துமுல்ல 09 மில்லியன்¸ க்லெனோர் இல – 01 த.வி¸ ஹப்புத்தல 09 மில்லியன்¸ இரத்தினபுரி நிவித்திகல கல்வி வலையம் கலவான த.வி¸ கலவான 08 மில்லியன்¸ மடபட்ர த.வி¸ கிரிஎல்ல 05 மில்லியன்¸ பலங்கொட கல்வி வலையம் சி.சி.த.ம.வி¸ பலங்கொட 8.5 மில்லியன்¸ எம்பில்பிட்டிய கல்வி வலையம் அல்பத் த.வி¸ புலுதொட்ட 10 மில்லியன் கேகாலை மாவட்டம் தெய்யோவிட்ட கல்வி வலையம் இங்கோயா த.வி¸ கித்துல்கல 06 மில்லியன்¸ கந்தலோயா த.வி¸ நாவலபிட்டி 09 மில்லியன்¸ ஸ்ரீ கலைவாணி த.வி¸ ருவன்வெல்ல 05 மில்லியன்¸ பனாவத்த த.வி¸ யட்டியன்தொட்ட 1.5 மில்லியன்¸ தென் மகாணம் எல்பிட்டடிய கல்வி வலையம் திவிதுர த.வி¸ எத்கதுர 6.5 மில்லியன்¸ இகல்கந்த த.வி¸ எல்பிட்டிய 3.5 மில்லியன்¸ ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
3 hours ago
9 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
11 Apr 2026