Sudharshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் தொனிப்பொருளுக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வரும் மலசலகூடங்கள் முறையாக அமைக்கப்படவில்லை என பாடசாலை ஆசிரியர்கள்; குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த அபிவிருத்தி நடவடிக்கையை, பாடசாலையின் அதிபர் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் பங்களிப்போடு செய்ய வேண்டும் என சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் பங்களிப்பு இன்றி அபிவிருத்தி பணிகள் பாடசாலை அதிபர்களினால் மட்டும் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மலசலகூடங்களை அமைப்பதற்கு உறுதி இல்லாத செங்கல், மணல் மற்றும் கம்பிகள் உட்பட பல பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் இம்மலசலகூடங்கள் உறுதியற்றதாக காணப்படுவதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மலையகத்திலுள்ள சில பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில், ஹட்டன் கல்வி வலயப் பணிப்பளார் எஸ்.பீ.இராஜசேகரிடம் வினவிய போது, 'தரம் குறைந்த பொருட்களை பற்றி எனக்குத் தெரியாது. இவ்விடயங்கள் தொடர்பில் பொறியிலாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் பங்களிப்பு இல்லாமல் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago