2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பொதுபலசேனாவின் கையெழுத்து வேட்டை

Sudharshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 இலட்சம் கையெழுத்து பெறும் வேட்டையை   பொதுபலசேனா அமைப்பு, கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு முன்னால் சனிக்கிழமை(31) ஆரம்பித்தது.

பொதுபலசேனாவின் அமைப்பாளர் திலந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன்போது, உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி திலந்த விதானகே,  

 'கண்டிப் பகுதியில் சில இளைஞர்கள் சேர்;ந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் பங்குகொள்வது, கைது செய்யப்பட்டுள்ள எமது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, நாட்டின் விடுதலை என்பவற்றை தலதாமாளிகை  புனித தந்தத்தின்  பொறுப்பில் ஒப்படைத்தல், இனிமேல் கைதுசெய்யப்பட உள்ள தேரர்களது பாதுகாப்புக்காக பிராத்தனை புரிதல் போன்ற விடயங்களுக்காகவே நாங்கள் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம்.

இக்கையெழுத்து வேட்டையில் முதலாவதாக ஞானசார தேரரின் தாயார் கையொப்பமிட்டார். அவர் உடல் நலக்குறைவுடன் இருந்தபோதும் தனது மகன்; தவறு செய்யவில்லை என்பதை நிலைநிறுத்த கடமைப்பட்டுள்ளார்.

தேரர்  பொய் கூறவில்லை. களவு எடுக்கவில்லை. ஆனால், யுத்தவீரர்கள் தொடர்பான விடுதலைக்குக் குரல்கொடுத்ததால் அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.   தேரரை மீட்பதே தாயாரின் நோக்கமாகும். இதற்காக நான் எனது தலையை மொட்டை அடித்து அதிஷ்ட்டான பூஜையையும் மேற்கொள்கிறேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .