Sudharshini / 2016 ஜனவரி 26 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
தெஹியத்தகண்டி பகுதியில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள பாதையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்ற நீதவான் லூசாக்கா தர்ம கீர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வார காலப்பகுதிக்குள் வீதி புனரமைப்பு விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி வீதி அபிவிருத்தி அதிகார சபைத்தலைவரை, நீதவான் பணித்தார்.
தெஹியத்தகண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதிமன்றத்தில் சமர்பித்த விஷேட மனுவொன்றினையடுத்தே, நீதவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்,
நீண்ட காலமாக தெஹியத்தகண்டி பகுதிகளிலுள்ள பாதைகள் குன்றும் குழியுமாக இருந்து வருகின்றன. இவற்றை புனரமைத்துத் தருமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வீதி புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதால் அவ்வீதியில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago