2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

புனித பூமியில் இறைச்சி விற்பனை செய்த 6 பேர் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன ஆரியதாச

சிகிரியா புனித பூமியிலுள்ள வனவிலங்குகளை கொன்று, இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த தொடர் நடவடிக்கையை சிகிரியா வன விலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், புனித பூமியில் மானை கொன்று இறைச்சியாக்கிய 6 பேரை காட்டிலகா அதிகாரிகள் இன்று (02) கைதுசெய்து, சிகிரியாபொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதான ஆறுவரும் கலேவல, வஹாகோட்டே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் நீண்டகாலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .