Kogilavani / 2016 ஜூலை 07 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லேகல, தும்பற சிறைச்சாலையிலுள்ள 12 அரசியல் கைதிகள், தாம் புனர்வாழ்வு பெற்றுச் செல்ல தயாராகவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜிடம் கூறியுள்ளனர்.
அந்த சிறைச்சாலைக்கு நேற்றுப் புதன்கிழமை (6) விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளை பார்வையிட்ட அவர், அவர்களது குறைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போதே, அக்கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இவ்விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மேலும் கூறியதாவது, 'தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதால், தாமும் புனர்வாழ்வு பெறுவதற்கு சம்மதித்ததாக போகம்பறை சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிள் கூறியுள்ளனர். இது தொடர்பிலான செய்திகள், மேற்படி அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலுடன் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை' என அரசியல் கைதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
புனர்வாழ்வு பெற்றுச்செல்ல தயாராகவுள்ள இவர்கள், அது தொடர்பிலான மனுவொன்றை என்னிடம் கையளித்தனர். இம்மனுவை, மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் விரைவில் கையளிக்கவுள்ளேன்' என அவர் மேலும் கூறினார்.
25 minute ago
49 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago
51 minute ago