Sudharshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பாடசாலை மாணவர்களுக்கிடையே தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் சமய மற்றும் கலாசார தொழிற்பாடுகளை முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ், எதிர்வரும் 25ஆம் திகதியன்று, 'மத்திய மாகாண தைபொங்கல் விழா'வை கண்டியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கன்னொறுவ, ரணபிம ரோயல் கல்லூரி மைதானத்தில் காலை 9.00 மணிக்கு இவ்விழா ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம், சகிப்புத் தன்மைக்கான நிறுவனத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதில், மத்திய மாகாண ஆளுநர் திருமதி சுரங்கனி எல்லாவல, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மாகாண அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago