Kogilavani / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான எதிர்நஞ்சு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேற்படி பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கவரம்மான தலைமையிலான குழு மேற்கொண்ட இவ்வாய்விலேயே இந்த எதிர்நஞ்சு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பேராதனை பல்கலைக்கழத்தின் உப வேந்தர் உபுல் திஸாநாயக்க தெரிவிக்கையில்,
“பாம்புக் கடி விஷயத்தை முறியடிப்பதற்கான மருந்து இதுவரை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது அதிக பண விரயத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
இதேவேளை, தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மருந்து நான்கு மடங்குகள் நன்மை பயக்கக்கூடியது என்றும் பாம்பு விஷம் உடலில் ஏறியவர்களில் 90 சதவீதமானவர்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026