2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

போராட்டத்தில் பற்கேற்குமாறு மலையக இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை  மற்றும் யாழ்ப்பாண நகரில், இன்றுத் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள போராட்டத்தில், மலையக இளைஞர், யுவதிகளையும் பங்கேற்குமாறு சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்தில், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பும் பங்கேற்கவுள்ளதாக அதன் அமைப்பாளரான மார்க்ஸ் பிரபாகரன் மேலும் கூறினார்.

'குறைந்தது 5 தொடக்கம் 25 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோருவதே இவ்வார்ப்பாட்டத்தின் நோக்கமாகும். மலையகத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் அரசியல் கைதிகளாக உள்ளதால், அவர்களை விடுவிக்க கொழும்பில் பணிப்புரியும் மலையக இளைஞர், யுவதிகளும் அணித்திரள்வது அவசியம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .