2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பிரான்ஸ் நாட்டு பிரஜையின் அலைபேசியை மீட்டுக்கொடுத்த பொலிஸார்

Sudharshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரான்ஸ் பிரஜையொருவர் தொலைத்ததாகக் கூறப்படும் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை, ஹட்டன் பொலிஸார் துரிதகதியில் செயற்பட்டு மீட்டுக்கொடுத்துள்ளதுடன் அலைபேசியை திருடியதாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் சாரதியையும் திங்கட்கிழமை (4) கைதுசெய்துள்ளனர்.

சிவனொளிபாதமலைக்கு சென்ற பிரான்ஸ் பிரஜைகள் இருவர், மீண்டும் தமது விடுதிக்கு திரும்புகையில் தாம்; பயணித்த முச்சக்கரவண்டியில் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் அவ்விருவரும் தனது அலைபேசி காணாமல் போய்விட்டதாக ஹட்டன்  பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் துரிதகதியில் செயற்பட்டு அலைபேசியை மீட்டுக்கொடுத்ததுடன் முச்சக்கர வண்டியின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .