Gavitha / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
பெருந்தோட்ட தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலாளிமார் சம்மேளனத்திலுள்ள 22 நிறுவனங்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இடையில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெறவிருந்த பேச்சு இரத்து செய்யப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்i, நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையும் எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் எந்தவொரு முன்மொழிவுக்கும் முதலாளிமார் சம்மேளனம் பிடிகொடுக்காது இருந்தமையால், இது தொடர்பாக சனிக்கிழமை (19) பிரதமருடன் பேசி முடிவுக்கு வருமாறு, , தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த பேச்சுவார்தையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago