Sudharshini / 2015 டிசெம்பர் 20 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளையிலுள்ள தனியார் வங்கியொன்றில் போலி நகையை அடகுவைப்பதற்காக சென்ற ஒருவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தங்க நகை என்ற போர்வையில் தங்க முலாம் பூசப்பட்ட இரும்பை, தனியார் வங்கியொன்றில் அடகு வைக்கச் சென்றவரையும் அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்றுமொருவரையும் மாத்தளை பொலிஸார் சனிக்கிழமை(19) கைதுசெய்துள்ளனர்.
மாத்தளையை சேர்ந்த நபரொருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர், போலி நகையை வங்கியில் அடகு வைப்பதற்காக எடுத்துவந்ததை அறிந்துகொண்ட வங்கியின் முகாமையாளர் அந்நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் உக்குவெலவைச் சேர்ந்த மற்றுமொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தங்க நகை என்ற போர்வையில் இவ்விருவரும் ஏற்கனவே இரு வளையல்களை வங்கிகளில் அடகு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago