2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

புஸ்ஸல்லாவை இந்து தேசியக் கல்லூரிக்கு புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

புஸ்ஸல்லாவை இந்து தேசியக் கல்லூரிக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சின் செயலாளர் ஆ.பந்துசேன மேற்கொண்டுள்ளார். இப்பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்படும் அதிபர் இன்னும் இரண்டு வாரங்களில் தமது கடமைகளை பொறுப்பேற்பாரென தெரியவருகிறது.

இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட காலம் முதல் அதிபராக  பீ.ராமலிங்கம்  என்பவர் கடமையாற்றி வந்தார். இவர் 2012 ஒக்டோபர் மாதம் ஓய்வுபெற்று சென்றதன் பின்னர் பதில் அதிபராக திருமதி ரவிசந்திரிக்கா நியமிக்கபட்டார்.

இக்கல்லூரிக்கு உரிய அதிபரை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு பல நடவடிக்களை எடுத்தபோதும் அவை பயனளிக்கவில்லை. இவ்விடயம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின்  கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து இப்பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, அதிபர் இன்றி இயங்கிவரும் ஏனைய  தேசிய பாடசாலைகளுக்கும் புதிய அதிபர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .