Editorial / 2018 ஜனவரி 15 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சு மரத்தின் கிளையொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதான இளைஞன், பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, தெனியாய, வரல்ல யோல்ட்டா தோட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் ஜயமோகன் என்பவரே உயிரிழந்துள்ளார். தோட்டத் தொழிலாளியான அவருக்கு, 3 வயதுடைய பெண் பிள்ளையொன்று இருப்பதுடன், அவருடைய மனைவி, 2 மாதக் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தன்னுடைய வீட்டுக்கு சற்றுத்தூரத்தில் உள்ள பஞ்சுமரமொன்றின் கிளையை குறித்த நபர், சனிக்கிழமை மாலை வெட்டிக்கொண்டிருந்துள்ளார். அக்கிளை சரிந்து, அதிவலுகொண்ட மின்கம்பியில் பட்டுள்ளது.
வெட்டப்பட்ட அக்கிளையின் ஊடாகக் கடத்தப்பட்ட மின்சாரம், அவரைத் தாக்கியுள்ளது. மரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அவர், சுமார் 40 அடி உயரத்திலிருந்து, மரத்துக்கு கீழே இருந்த பாறையொன்றின் மீது தலைகீழாக விழுந்துள்ளார்.
விபரீதத்தை அறிந்து விரைந்து செயற்பட்ட ஊர் மக்கள், அவரை மொறவக்க வைத்தியச்சாலைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.
அவருடைய சடலம், மரண பரிசோதனைக்காக, மொறவக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தெனியாய பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
22 minute ago
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
18 Apr 2026