2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பட்டாசு உற்பத்தியில் 50% வீழ்ச்சி

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நாடு முழுவதிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக இம்முறை பண்டிகை காலத்தில் பட்டாசு உற்பத்தி, 40 முதல் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்புக் காலத்தில் பட்டாசுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருந்த போதும், இம்முறை பட்டாசு உற்பத்தியில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கண்டி மாவட்ட தலைவர் சேன தயானந்தவிடம் இது தொடர்பில் வினவிய போது, 'கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் அனைத்து பாகங்களிலும் பட்டாசு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக பட்டாசுக்கான வெடி பொருட்களை காய வைப்பது கஷ்டமாகிவிட்டது. இதன் காரணமாக வழமையான உற்பத்தியில் 40 முதல் 50 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது' என்றார்.  

'பட்டாசு உற்பத்தயின் வீழ்ச்சிக்கு காரணமாக மழை பிரதானமாக இருந்த போதும் மேலும் சில காரணங்களும் உற்பத்தியை பாதித்துள்ளன. இத்துறைக்கு புதியவர்களின் பங்களிப்பு கிடைப்பதில்லை. இதனாலும் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இம்முறை பண்டிகைக் காலத்தில் சந்தைக் கேள்வியளவுக்கு உள்ளூர் தயாரிப்பு இல்லை.

பட்டாசு உற்பத்தித்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் பட்டாசு உற்பத்தி இலங்கையில் முழுமையாக தடைபடும் வாய்ப்பு உண்டு.

எவ்வாறாயினும், பட்டாசு உற்பத்தி வீழ்ச்சி கண்டபோதிலும் அதன் சந்தை விலைப் பெறுமதியில் மாற்றம் ஏற்படாது என சேன தயானந்த மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .