2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பதுக்கி வைத்திருந்த 104 உர மூடைகள் கைப்பற்றல்

Kogilavani   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நுவரெலியா நகரில் உரக்கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த யூரியா உர மூடைகள் 104ஐ, விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

தலா 50 கிலோகிராம் நிறைகொண்ட ஓர் இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உரமூடைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.  

நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.எலன் மீகஸ்முல்லவுக்கு  விவசாயிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இம்மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உரத்தின் விலை கூடும் என நினைத்து விவசாயிகளுக்கு உரத்தை விற்பனை செய்யாமல்  உரம் இல்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் செயலாளருக்கு முறைபாடு செய்துள்ளனர்.

இந்த உரத்தை மறைத்து வைத்திருந்த முகவருக்கு எதிராக நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .