2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பதுளையில் 6,615 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை

Sudharshini   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா  

பதுளை மாவட்டத்தில் மின்சார வசதியின்றி 6,615 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் இதில் மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக 3,134 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

'பதுளை மாவட்டத்தில் மின்சார வசதியின்றி இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள், மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தோட்ட முகாமைத்துவங்கள் அதற்கான அனுமதியை வழங்க மறுத்து வருகின்றன. தோட்ட முகாமைத்துவங்களின் செயற்பாடுகளினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

'மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை தேசிய சலுகை அடிப்படையிலான வேலைத்திட்டமாகக் கருதி முன்னெடுத்த போதிலும், தோட்ட முகாமைத்துவங்கள் முறைப்படி செயற்படாதலால், இதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனது.

இதனால்;, தேசிய சலுகை அடிப்படையிலான வேலைத்திட்டமான மின்சாரம் வழங்கும் இச்செயற்பாடுகளுக்கு, கிராமசேவகர்கள் மட்டும்  சிபாரிசு செய்யும் பட்சத்தில், மின்சார வசதிகளற்ற அனைவருக்கும் மின்சாரம் வழங்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .