Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ. ரமேஸ்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவோகா தோட்டத்தில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேகநபர்களில் எழுவரை, நுவரெலியா மேல் நீதிமன்றம், நேற்று வியாழக்கிழமை (04) விடுதலை செய்ததுடன், குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 10 வருடச் சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பன்னடையான் பன்னீர்ச்செல்வம் என்பவரின் கொலை தொடர்பான இவ்வழக்கு, கண்டி மற்றும் நுவரெலியா மேல் நீதிமன்றங்களில், கடந்த 16 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு, நேற்று மாலை 03 மணியளவில் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்கவினால் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கிளரன்டன் அவோகா தோட்டத்தில் 12.10.2000 அன்று, கொந்தரப்பு முறையில் மரங்கள் தரிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில், தரிக்கப்பட்ட மரங்களின் மரக்குற்றிகளை களவாடும் நோக்கில் இரவு 07 மணியளவில், சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்ட ராமன் பாஸ்கரன், ஆர்.மகேந்திர செல்வம், ஆர்.ஜெயசீலன், வி.சண்முகநாதன், பி.ஹரிச்சந்திரன், கே.கிருஸ்ணகுமார், பி.லக்மன், பி.யோகராஜ் ஆகியயோர் செயற்பட்டதையடுத்து இவர்களை காவலாளிகளிடம் காட்டிக்கொடுக்கக் கூச்சலிட்ட பன்னடையான் பன்னீர்செல்வம் என்பவரைப் பொல்லால் தாக்கியுள்ளனர்.
இரத்தம் சொட்ட மயங்கிய அவரை உறவினர்கள் வீட்டுக்குக் கொண்டுவந்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நானுஓயாப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகநபர்களை இனங்கண்டு கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இவர்கள், 13.10.2000 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட வேளையில், விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
03 மாத விளக்கமறியலைத் தொடர்ந்து கண்டி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட காலப்பகுதியில் சந்தேகநபர்கள், பிணையில் விடுதலை செய்யப்ட்டிருந்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து தொடர்ந்த இவ்வழக்கின் தீர்ப்பு, நேற்று (04) அளிக்கப்பட்டது.
இதன்போது, நீதிபதி லலித் வீரதுங்க விசாரணைகளை ஆராய்ந்து சந்தேகநபர்கள் 08 பேரில் எழுவரை விடுதலை செய்ததுடன், சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட ராமன் பாஸ்கரன் (வயது 48) என்பவருக்கு 10 வருடகாலச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இவர், தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் சிவில் கிராமப் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்ததக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago