Gavitha / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி மாவட்டத்தில், பன்விலை பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர், இன்று (06) அடையாளம் காணப்பட்டார்.
பன்விலை அங்கம்மன பன்விலவத்த பிரதேசத்திலேயே முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
55 வயதான இவர், கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதன் பின்னரே, தனது வீட்டுக்கு வந்துள்ள இவர், பன்விலை மருத்துவ அதிகாரிக்கு தான் வந்துள்ள விடயம் தொடர்பாக, தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அந்நபருக்கு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், நேற்று (05) அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொற்றுக்கு உள்ளான இவரின் குடும்பத்திலுள்ள நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026