2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

இலவச கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டி பேராதனை பல்கலைக்கழத்தின் 9 பீடங்களையும் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள், கண்டி- பேராதனை வீதியில், புதன்கிழமை(20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல், மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு சட்ட அங்கிகாரம் வழங்குதல் மற்றும் கல்வியை தனியார்;மயப்படுத்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், பேராதனையில் இருந்து கண்டி வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் மேற்கொண்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .