2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் சுற்றுலா விடுதி

Sudharshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் திறன் விருத்தி மத்திய நிலையத்துடன் புதிய சுற்றுலா விடுதியொன்றும் 60 இலட்சம் ரூபாய் செலவில் பொலிஸ் நலன்புரிச்சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு திங்கட்கிழமை (18)  திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.டி.தனசிங்க, 'சிறைக்கைதிகளிடம் காணப்படும் திறன்களை இனங்கண்டு அவற்றை விருத்தி செய்வதன் ஊடாக, சிறையிலிருந்து வெளியே சென்றவுடன் அவர்கள் தமக்கான வாழ்வாதாரத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும்' எனக் கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்லேகல திறந்த வெளிச்சிறைச்சாலை, எப்போதும் விஷேட இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு காலப் பகுதிகளிலும் பல்வேறு சிறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்;களும் கடமையாற்றிய போதும் தொடர்ந்து அது தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு காரணம், நீண்டகால சிறை வாழ்க்கையின் பின்னர், கைதிகள் சுதந்திரமாக நடமாட விடப்படுவதனால் அவர்களது மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகும். பல வருடங்கள் ஓர் இடத்தில் அடைப்பட்டிருந்தவர்;களுக்கு தமது சொந்த வீடுகளை விடவும் மகிழ்ச்சியான இடமாக இது மாறுவதால் கைதிகள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் எப்போதும் கௌரவத்திற்குரிய இடமாக உள்ளது.

அது மட்டுமல்லாது, இங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிறைக்கைதிகளைப் பொறுத்தவரையில், மூன்று விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாவதாக,  மனதை கட்டுப்படுத்துவது முக்கிய இடம் வகிக்கிறது. அதற்கு சாதகமான சுற்றாடல் தேவை. அமைதியான இடம் தேவை. கடமையிலுள்ள அதிகாரிகளின் அன்பு, பரிவு, பாசம், நேசம் போன்ற அனைத்தும் தேவை. அதேநேரம் கண்டிப்பும் இருக்க வேண்டும். இதற்கான சூழல் பல்லேகலையில் அமைந்துள்ளது. சகல சமயத்தவர்களும் அமைதியாக மனக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும்.

அடுத்ததாக திறன்விருத்தி மிக முக்கியம். ஏனெனில், அவர்கள் வெளியுலகத்துக்குச் சென்று மகிழ்வுடன் வாழ வழிசமைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு திறனுடன்தான் பிறக்கிறான். அதனை இனங்கண்டு வழிகாட்ட வேண்டும். தவறு நடந்துவிட்ட போதிலும்,  அவர்;கள் திருந்தி மனிதப் பண்புகளுடன் வாழ்வதற்கு திறன்களை விருத்தி செய்ய வேண்டும். அதற்கான மத்திய நிலையம் ஒன்றும் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது விடயம் மிக முக்கியமானது. சிறைக்கைதிகள் விடயத்தில் பலரும் நலன் விரும்பிகளாக பங்குகொண்டு கைதிகளுக்கு உதவ வேண்டும். அவர்களை வழிநடத்தும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களது நலன்கள் பற்றி அதிகமானோர்; கவலைப்படுவதில்லை' என்று அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .